தீபாவளியையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 30% குறைப்பு – முக்கிய நடவடிக்கை!!

0
தீபாவளியையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 30% குறைப்பு - முக்கிய நடவடிக்கை!!
தீபாவளியையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 30% குறைப்பு - முக்கிய நடவடிக்கை!!
தீபாவளியையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 30% குறைப்பு – முக்கிய நடவடிக்கை!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் 30% வரை குறைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்து:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இருந்தே துணி மற்றும் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும், தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நவ.9 ஆம் தேதியில் இருந்து 16000 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளது. பெரும்பாலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

தீபாவளி விடுமுறை நீட்டிப்பு?! – மாணவர்களுக்கு ஜாலி தான்!

அதிலும், குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் ரூ.4,000 வரைக்கும் கூட பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்து நிர்வாகம் நிர்ணயித்த விலையை காட்டிலும் 30% வரை விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!