Reliance Jio நிறுவனத்தின் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் – நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவுடன்!

0
Reliance Jio நிறுவனத்தின் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் - நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவுடன்!
Reliance Jio நிறுவனத்தின் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் - நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவுடன்!
Reliance Jio நிறுவனத்தின் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் – நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவுடன்!

இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் தற்போது ரீசார்ஜ் திட்டங்களில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஜியோ நிறுவனம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஏனெனில் குறைந்த ரீசார்ஜ் திட்டங்களில் பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது. அதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவச ஓடிடி சந்தாக்களை வழங்கி வருகிறது. இந்த போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் உயர்கல்வி வரை தமிழ் வழிக்கல்வி கட்டாயம்? அரசுக்கு கோரிக்கை!

இதில் முதலாவதாக ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதத்திற்கு 75ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அத்துடன் 75ஜிபி டேட்டா முடிந்தால் அதன் பிறகு 1 ஜிபி டேட்டாவை ரூ.10க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் பெறலாம். மேலும் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் செய்ய முடியும். இதையடுத்து ரூ.599 என்ற போஸ்ட் பெய்டு திட்டத்தில் மாதத்திற்கு 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முந்தைய திட்டத்தில் உள்ளது போல 200 ஜிபி டேட்டாவை ரோல் ஓவர் செய்ய முடியும். மேலும் 100 ஜிபி டேட்டா முடிவடையும் போது ரூ.10க்கு ரீசார்ஜ் செய்து 1 ஜிபி டேட்டாவை பெறலாம்.

PF கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடிப்படை ஊதியம் அதிகம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியம்!

அடுத்ததாக 799 ரீசார்ஜ் திட்டத்தில் மாதத்திற்கு 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் 200 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமான ரூ.999 திட்டத்தில் மாதத்திற்கு 200 ஜிபி டேட்டாவும் மற்றும் 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டாவும் கிடைக்கிறது. இதையடுத்து ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 300 ஜிபி டேட்டாவும், 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டாவும் கிடைக்கிறது. அத்துடன் இந்த அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டத்திலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி, மூவிஸ் உள்ளிட்ட சந்தாக்களை இலவசமாக பெற முடியும். அதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!