மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் மார்ச் மாதத்தில் வங்கிகள் மூடப்படும் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின் படி, இம்மாதம் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வங்கிகள் விடுமுறை
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு துவங்கும் போதும் அந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் என அனைத்தையும் அந்தந்த நிறுவனங்கள் பட்டியலிட்டு வெளியிடும். அந்த வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பிப்ரவரி மாதத்தில் சுமார் 11 நாட்கள் வரை வங்கிகள் அடைக்கப்பட்டிருந்தது. அதே போல இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் மார்ச் மாதத்திலும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Reliance Jio நிறுவனத்தின் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் – நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவுடன்!
அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலின் படி, இம்மாதம் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட உள்ளது. இதில் 4 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள், மாநிலங்களுக்கான விடுமுறைகள், சிறப்பு விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் ஆகியவையும் அடங்கும். மேலும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
SBI வங்கியில் வேலைவாய்ப்பு – மாத சம்பளம் ரூ.63,840! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இப்போது மார்ச் மாதத்தில் வங்கிகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் நாட்களை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- மார்ச் 1 – அகர்தலா, ஐஸ்வால், சென்னை, காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, டெல்லி, பனாஜி, பாட்னா மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.
- மார்ச் 3 – லோசர் காரணமாக கேங்டாக்கில் வங்கி மூடப்படும்.
- மார்ச் 4 – சாப்சார் குட் தினத்தை முன்னிட்டு ஐஸ்வாலில் வங்கி மூடப்படும்.
- மார்ச் 6 – ஞாயிறு, வார விடுமுறை
- மார்ச் 12 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
- மார்ச் 13 – ஞாயிறு, வார விடுமுறை
- மார்ச் 17 – டேராடூன், கான்பூர், லக்னோ மற்றும் ராஞ்சியில் ஹோலிகா தஹான் பகுதியில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
- மார்ச் 18 – பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, இம்பால், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் தவிர மற்ற இடங்களில் ஹோலி, துலேட்டி, டோல் ஜாத்ரா காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- மார்ச் 19 – ஹோலியை முன்னிட்டு புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னாவில் யோசங் வங்கிகள் மூடப்படும்.
- மார்ச் 20 – ஞாயிறு, வார விடுமுறை
- மார்ச் 22 – பீகார் தினத்தன்று பாட்னாவில் வங்கி மூடப்பட்டது
- மார்ச் 26 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
- மார்ச் 27 – ஞாயிறு, வார விடுமுறை