SBI வங்கியில் வேலைவாய்ப்பு – மாத சம்பளம் ரூ.63,840! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SBI வங்கியில் வேலைவாய்ப்பு - மாத சம்பளம் ரூ.63,840! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு - மாத சம்பளம் ரூ.63,840! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு – மாத சம்பளம் ரூ.63,840! விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

கொரோனா பரவல் காரணமாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளை இழந்தனர். தற்போது தொற்று பரவல் குறைந்தது தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து SBI வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியில் சேருவதற்கு மாத சம்பளமாக ரூ.36,000 முதல் 63,840 வரை வழங்கப்பட உள்ளது.

PF கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடிப்படை ஊதியம் அதிகம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியம்!

அத்துடன் Assistant Manager(Network Security/Specialist) பணிக்கு ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராகவும் மற்றும் Cicso CCNA Security, JNCIA-SEC, JNCIS-SEC, CCSA, PCCSA, Fortinet NSE1, Fortinet NSE2, Fortinet NSE3 உள்ளிட்டவற்றில் ஏதெனும் ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Assistant Manager (Routing and Switching) பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவராகவும் மற்றும் Cisco CCDA, Cisco CCNA Data Centre, Cisco CCNA, Routing and Switching, Cisco CCNA Service Provider, Junior, NCIA, Juiper JNCIS – ENT, Junipet, JNCIS-SP, ACCA/F5 Certified Admonistrator, Technical Specialist, CCAN, Hardware RCAS-AL உள்ளிட்டவற்றில் ஏதெனும் ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

மேலும் இதற்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவர்கள் https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற  இணையதள முகவரிக்கு சென்று வருகிற 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணமாக 750 ரூபாய் செலுத்த வேண்டும் அத்துடன் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. இப்பணிக்கான எழுத்து தேர்வு மார்ச் 20ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான நுழைவு சீட்டை மார்ச் 5ம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!