விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலகும் ஆல்யா மனசா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவியின் 'ராஜா ராணி 2' சீரியலை விட்டு விலகும் ஆல்யா மனசா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியின் 'ராஜா ராணி 2' சீரியலை விட்டு விலகும் ஆல்யா மனசா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலகும் ஆல்யா மனசா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் இருந்து சமீபத்தில் பல பிரபலங்கள் விலகி வருகின்றனர். இது போன்று அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ராஜா ராணி 2 சீரியலை விட்டு ஆல்யா மானசா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆல்யா மானசா விலகல்:

திரைப்படங்களில் பார்ட் 1 அதனை தொடர்ந்து பார்ட் 2 என்று எடுப்பது போல் சின்னத்திரையில் சீரியல்களை பல சீசன்களாக எடுத்து வருகின்றனர். மக்களின் மனதை கவர்ந்த மெகா ஹிட் ஆன சீரியல்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் விஜய் டிவியின் சீரியல்களில் சரவணன் மீனாட்சிக்கு அடுத்த படியாக சீசன் 2 எடுத்து வருவது ராஜா ராணி சீரியல் தான். ராஜா ராணி சீரியல் மக்களின் மனதை கவர்ந்த முக்கிய தொடராகும். இந்த கதையில் நடித்து வந்த அனைவரும் மிகவும் பிரபலம். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் இந்த தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

இவருக்கு ஜோடியாக மானாட மயிலாட என்ற நடன தொடரின் மூலம் பிரபலமடைந்த ஆல்யா மானசா கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இவரின் நடிப்பு இந்த தொடரில் பெரிதும் பேசப்பட்டது. ஒன்றாக நடித்து வந்ததன் மூலம் சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் நிஜத்தில் காதலிக்க தொடங்கினார்கள். பின்னர், திருமணமும் செய்து தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஜோடியினருக்கு தற்போது அய்லா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்த ஜோடிக்கு உள்ளது போல், இவர்களின் குழந்தைக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே இணையத்தில் உள்ளது.

‘விஜய் டிவி’ ஆல்யா மனசா முதல் ‘ஜீ தமிழ்’ ஷபானா வரை – ரீலில் இருந்து நிஜமாக மாறிய ஜோடிகளின் லிஸ்ட்!

ஆல்யா தனது பிரசவத்திற்கு பிறகு, விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 தொடரில் ஐபிஎஸ் ஆக துடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் பிட் ஆக வந்தது அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருந்தது. இதேபோல், சஞ்சீவ் தற்போது சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் ப்ரோமோஷன் வீடியோ லைவ் நிகழ்ச்சியில் ஆல்யா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிய தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமாகி உள்ள காரணத்தால் ஆல்யா ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அறிந்த இவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!