பிறந்த முதல்நாளே பென்ஸ் காரில் சென்ற அர்ஷ் – ஆலியா மற்றும் சஞ்சீவ்வின் லேட்டஸ்ட் வீடியோ!

0
பிறந்த முதல்நாளே பென்ஸ் காரில் சென்ற அர்ஷ் - ஆலியா மற்றும் சஞ்சீவ்வின் லேட்டஸ்ட் வீடியோ!
பிறந்த முதல்நாளே பென்ஸ் காரில் சென்ற அர்ஷ் - ஆலியா மற்றும் சஞ்சீவ்வின் லேட்டஸ்ட் வீடியோ!
பிறந்த முதல்நாளே பென்ஸ் காரில் சென்ற அர்ஷ் – ஆலியா மற்றும் சஞ்சீவ்வின் லேட்டஸ்ட் வீடியோ!

ஆலியாவிற்கு தற்போது தான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து மருத்துவமனையில் கிளம்பும்போது புதிதாக வாங்கியிருந்த பென்ஸ் காரில் கிளம்பியுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பென்ஸ் காரில் சென்ற அர்ஷ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டனர். தற்போது ஆண் குழந்தை பிறந்ததால் சொன்னபடி அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர்.

கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, இருவரையும் சந்திக்க வைக்க திட்டமிடும் ராதிகா – இன்றைய எபிசோடு!

பிரசவ அறைக்கு உள்ளே ஆலியா செல்லும்போது வரை உள்ள அனைத்து அழகிய தருணத்தையும் சஞ்சீவ் ஒரு வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார். பிரசவ வலி வந்த நிலையிலும் கூட அமைதியாக சிறிதும் மனம் தளராமல் இன்னும் சில மணி நேரத்தில் சின்ன குட்டி பாப்பா அல்லது ஒரு பையனை பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என மகிழ்ச்சியில் இருக்கிறார். பிரசவ அறைக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வெளியே இருந்து ஐலா பாப்பா பிரசவ அறைக்குள் ஓடி வருகிறார். இந்த ஒரு அழகிய தருணத்தையும் வீடியோவாக சஞ்சீவ் தற்போது வெளியிட்டுள்ளார்.

பிரசவ அறைக்குள் வந்து தம்பியின் முகத்தை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். அதற்குப்பிறகு இரண்டாவது குழந்தையை பென்ஸ் காரில் தான் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கில் பிரசவத்திற்கு முன்பே 75 லட்சம் மதிப்புள்ள கருப்பு நிற பென்ஸ் காரை ஆலியா மற்றும் சஞ்சீவ் வாங்கியிருந்தனர். தற்போது மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது அந்த பென்ஸ் காரில் தான் வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோவை ஆலியா மற்றும் சஞ்சீவ் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!