விஜய் டிவி ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக பெற்ற தருணம் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக பெற்ற தருணம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக பெற்ற தருணம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக பெற்ற தருணம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமாகிய சஞ்சீவ் – ஆல்யா ஜோடி தற்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் ஆலியா முதல் முறையாக தனது மகனை பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

விஜய் டிவியில் பிரைம் டைமில் ராஜா ராணி 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் வரவேற்பு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இத்தொடரில் சித்து சரவணன் கதாபாத்திரத்திலும், சந்தியாவாக ஆலியா மானசாவும் நடித்து வந்தார். இத்தொடரின் முதல் சீசன் ராஜா ராணி தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த நிலையில் தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு ஐலா சையத் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார்.

மீண்டும் ஏமாற்றும் கோபி, எச்சரித்த எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!

இந்நிலையில் ஆலியா ராஜா ராணி 2வில் கதாநாயகியாக கமிட் ஆனார். ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி நிறைமாத கர்பிணியாகவும் தொடரில் நடித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜா ராணி 2 தொடரின் ப்ரோமோ ஒன்று வெளியாகி, அதில் ஆலியாவே சந்தியாவாக இனி இவர் என்று நடிகை ரியாவை அறிமுகம் செய்து வைத்தார். ராஜா ராணி 2 தொடர் கிட்டதட்ட 900 எபிசோடுகளை தாண்டிய பிறகு ஹீரோயினி மாத்தி இருப்பதால் ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதற்கு முன்னதாக பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியை மாற்றியதால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி இருந்தனர்.

இந்த நிலையில் ஆலியாவுக்கு சில தினங்களுக்கு முன்பு இரண்டாவதாக அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஆல்யா மானசா தனது மகனை முதல் முறையாக வாங்கிய தருணம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சஞ்சீவ் தனது YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடுத்தர குடும்ப பெண் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அண்மையில் சன் குடும்ப விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அதில் சஞ்சீவ்வுக்கு “நட்சத்திர நாயகன்” என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here