எம்.பில் (M.Phil) மாணவர் சேர்க்கை ரத்து – அழகப்பா பல்கலை அறிவிப்பு!!

0
எம்.பில் (M.Phil) மாணவர் சேர்க்கை ரத்து - அழகப்பா பல்கலை அறிவிப்பு!!
எம்.பில் (M.Phil) மாணவர் சேர்க்கை ரத்து - அழகப்பா பல்கலை அறிவிப்பு!!
எம்.பில் (M.Phil) மாணவர் சேர்க்கை ரத்து – அழகப்பா பல்கலை அறிவிப்பு!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக்கொள்கை காரணமாக எம்.பில் படிப்புகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த பகுதியை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் ஆண்டுக்கு 500 மாணவர்கள் உயர்கல்வி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர் என பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகம்:

தமிழகத்தில் உள்ள சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியை சேர்ந்த அழகப்பா பல்கலைக்கழகம் திகழ்கிறது. 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் அழகப்பா செட்டியாரின் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 28 பாட பிரிவுகளின் கீழ் பல பட்டப்படிப்புகள் உள்ளன.

ஜனவரி 30ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்தும் பல மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் எம்.பில் (M.Phil) பட்டம் பெற்றனர்.

ஆனால் புதிய கல்விக்கொள்கை காரணமாக இந்த ஆண்டு எம்.பில் படிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் உயர்கல்வியை தேடி மதுரை, திருச்சி, கோயம்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றனர். Ph.D பட்டம் பெற நுழைவுத்தேர்வு அமல்படுத்தியுள்ளதால் எம்.பில் படிப்பு தேவையில்லாமல் போய்விட்டது.

4.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி – தலைமை அதிகாரி தகவல்!!

இதுகுறித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகையில், “தேசிய கல்விக்கொள்கை காரணமாக Ph.D படிப்புகளுக்கு எம்.பில் படிப்பு தேவையில்லாமல் நுழைவுத்தேர்வு மூலம் Ph.D படிக்கின்றனர். இதன் காரணமாக எம்.பில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. தேசிய பல்கலைக்கழக நிர்ணய குழு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் Ph.D படித்தவர்களை மட்டுமே வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே எம்.பில் தேவையில்லை என்று கூறப்படுகிறது”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!