AIIMS மதுரை வேலைவாய்ப்பு – ரூ.56,100/- ஊதியம் !

0
AIIMS மதுரை வேலைவாய்ப்பு - ரூ
AIIMS மதுரை வேலைவாய்ப்பு - ரூ

AIIMS மதுரை வேலைவாய்ப்பு – ரூ.56,100/- ஊதியம் !

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சமீபத்தில் Medical Superintendent, Financial Advisor, Executive Engineer (Electrical), Administrative Officer போன்ற பணிகள் காலியாக உள்ளதால் அதை நிரப்பும் பொறுத்து வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம்.

Madurai AIIMS வேலைவாய்ப்பு விவரங்கள்:

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சமீபத்தில் Medical Superintendent, Financial Advisor, Executive Engineer (Electrical), Administrative Officer போன்ற பணிகளுக்கு என தல ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில், Medical Superintendent பணிக்கு மருத்துவ துறையில் Post Graduate (MD, MS) அல்லது M.H.A. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Financial Advisor பணிக்கு Finance & Accounts துறையில் Degree-யை டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Executive Engineer (Electrical) பணிக்கு ஏதேனும் ஒரு Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Administrative Officer பணிக்கு MBA or Post Graduate Diploma in Personal Management டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிக்கு தகுந்தாற்போல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Medical Superintendent பணிக்கு 10 வருடம், Financial Advisor பணிக்கு 5 வருடம், Executive Engineer (Electrical) பணிக்கு 8 வருடம், Administrative Officer பணிக்கு 3 வருடம் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.2,18,200 வரை மாத ஊதியம் பெறுவார்கள்.இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நாளைக்குள் வந்து சேரும்படி, அனுப்பி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Madurai AIIMS Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!