AIIMS தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியீடு!!

0
AIIMS தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு - அறிவிப்பு வெளியீடு!!
AIIMS தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு - அறிவிப்பு வெளியீடு!!
AIIMS தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியீடு!!
நடப்பு ஆண்டு எய்ம்ஸ் வாரியத்தின் மாணவர்களுக்கான துணை தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று எய்ம்ஸ் வாரியம் அறிவித்துள்ளது.

எய்ம்ஸ் வாரியம்:

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் ஜேஇஇ, முதுகலை நீட், பல்கலை, பள்ளிகளின் தேர்வுகள் போன்ற அனைத்து முக்கிய தேர்வுகளும் மாணவர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், எய்ம்ஸ் பல்கலையின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி – ICAI வாரிய உறுப்பினர் விளக்கம்!!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 2021 இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான தேர்வுகளும், இரண்டாம் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான துணை தேர்வுகள், செய்முறை தேர்வுகள்; வாய்வழி தேர்வுகள் கொரோனா நோய் தொற்று காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் அனைத்தும் நடக்கும் தேதிகள் பற்றி சரியான நேரத்தில் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்படும். திருத்தப்பட்ட தேதிகள் குறித்து எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான aiimsexams.ac.inல் வெளியிடப்படும். தேர்வு பற்றிய புதிய அறிவிப்புகளை மாணவர்கள் தொடர்ந்து அதிகாரபூர்வ தளத்தில் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!