அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்? முக்கிய தகவல் வெளியீடு!

0
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்? முக்கிய தகவல் வெளியீடு!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்? முக்கிய தகவல் வெளியீடு!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்? முக்கிய தகவல் வெளியீடு!

வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்வது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்:

அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை நீடித்து வரும் நிலையில், சென்னையில் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாததால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. மேலும் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதுடன், பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் 11ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதனை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். எனினும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த இபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

முதல் முறையாக காதலியின் புகைப்படத்தினை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் பதிவு!

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக மட்டுமே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். அதன்படி தொண்டர்கள் மூலம் வாக்குகள் செலுத்தப்பட்டு அவர் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். அத்துடன் மாவட்ட அளவில் தீர்மானங்களை நிறைவேற்றி, வட்ட அளவிலும் தீர்மானங்களை நிறைவேற்றி, எடப்பாடிக்கு ஆதரவாக எல்லா மாவட்டங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்படுவார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here