நீட் தேர்வில் கட்ஆப் மதிப்பெண் இல்லையென்றாலும் மருத்துவ படிப்பில் சேர்க்கை – மத்திய அரசு அறிவிப்பு!

0
நீட் தேர்வில் கட்ஆப் மதிப்பெண் இல்லையென்றாலும் மருத்துவ படிப்பில் சேர்க்கை - மத்திய அரசு அறிவிப்பு!
நீட் தேர்வில் கட்ஆப் மதிப்பெண் இல்லையென்றாலும் மருத்துவ படிப்பில் சேர்க்கை - மத்திய அரசு அறிவிப்பு!
நீட் தேர்வில் கட்ஆப் மதிப்பெண் இல்லையென்றாலும் மருத்துவ படிப்பில் சேர்க்கை – மத்திய அரசு அறிவிப்பு!

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான காலியிடம் நிரப்படாமலேயே இருக்கின்றன. இதனால், நீட் தேர்வில் பெற்ற கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் கலந்தாய்வு கூட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 2021 கடந்த ஜனவரி 10 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதனையடுத்து, அகில இந்திய மற்றும் மாநில அளவில் காலியாக உள்ள மருத்துவ படிப்புகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த காலியிடங்களில் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் நீட் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 15 சதவீதத்தை குறைக்கலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்தது.

Exams Daily Mobile App Download

இதற்கு பிறகு இரண்டு கூடுதல் கலந்தாய்வு கூட்டம் மற்றும் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இருந்தாலும் கூட 747 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில், காலியிடங்களை நிரப்புவது குறித்தான ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வில் பெற்ற கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் இரண்டாவது சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய மற்றும் மாநில அளவில் தேர்வாகாத மாணவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10,300 ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு

மேலும், 2022 ஆண்டிற்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு குறித்தான தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால் https://natboard.edu.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டுமே உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான காலியிடம் முழுமையாக நிரப்படாமலேயே உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!