கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம், தீவிர சிகிச்சை – தோழி பரிதாப பலி!

0
கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம், தீவிர சிகிச்சை - தோழி பரிதாப பலி!
கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம், தீவிர சிகிச்சை - தோழி பரிதாப பலி!
கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம், தீவிர சிகிச்சை – தோழி பரிதாப பலி!

தமிழ் திரைத்துறையின் பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பலத்த காயம் அடைந்துள்ள அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

நடிகை யாஷிகா

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமடைந்து வரும் நடிகை தான், யாஷிகா ஆனந்த். இவர் முதன் முதலாக நடிகர் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடித்த “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ள யாஷிகா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடக்கம் – இலங்கை அரசு அறிவிப்பு!

பெரும்பாலும், இவர் கவர்ச்சி வேடங்களில் தான் நடித்து வந்தார். இவர் கதாநாயகியாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் நடித்து பல விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால், அதனை காதில் வாங்காத யாஷிகா தற்போது தமிழில் மட்டும் கைவசம், இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதில் “கடமையை செய்” திரைப்படத்தின் ஷூட்டிங்கில் யாஷிகா கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு யாஷிகா தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டி முடிந்து வீடு திரும்புகையில் மாமல்லபுரம் அருகே இவரது கார் சென்டர் மீடியனில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. அதில் அவரது தோழியான பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். யாஷிகா மற்றும் இரு ஆண் நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!