பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிய மிளா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிய மிளா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிய மிளா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிய மிளா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. அதில் நடிக்கும் சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி பிரபலங்கள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் எந்த அளவுக்கு மக்களிடத்தில் தற்போது ரீச் ஆகி உள்ளது என்பது விஜய் டெலிவிஸன் அவார்டில் இந்த சீரியலுக்கு கிடைத்த அவார்ட் எண்ணிக்கையை வைத்தே மதிப்பிட்டு கொள்ளலாம். அந்த அளவுக்கு அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்து படு சூடாக நகரும் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் ஒரு பட ஷூட்டிங்க்காக சென்றபோது அவர்களது காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்தாகியிருக்கிறது.

தனது மகன் அர்ஸை கொஞ்சிய நடிகர் சஞ்சீவ், ஆலியா கேட்ட கேள்வி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

அதாவது, பாக்கியலட்சுமி தொடரில் செல்வி அக்காவாக நடித்து வரும் கம்பம் மீனா, பாக்கியாவின் மருமகள் மற்றும் செழியனின் மனைவி ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷ் மற்றும் நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான மிளாவோடு நெருக்கமான நட்பை கொண்டிருக்கின்றனர். மூவரும் அடிக்கடி வெளியே சுற்றுவதும், சந்திக்கும் பொழுது எடுத்து கொள்ளும் செல்பிகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாமல் பதிவு செய்து வருவார்கள்.

ExamsDaily Mobile App Download

இந்நிலையில் திவ்யா கணேஷ், கம்பம் மீனா, மிளா ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பிற்காக குமுளிக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது திடிரென எதிர்ப்பாராத விதமாக திருச்சி பக்கத்தில் மற்றோரு கார் ஒன்று மோதி விபத்தாகியிருக்கிறது. இதில் அதிர்ஷ்டவசமாக மூவருக்கும் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார்கள். ஆனால் மிளாவுக்கு மட்டும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நேற்று நடந்த இந்த விபத்து சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!