‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்பட நடிகைக்கு திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து மழை! வெளியான புகைப்படம்!

0
'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்பட நடிகைக்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து மழை! வெளியான புகைப்படம்!
'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்பட நடிகைக்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து மழை! வெளியான புகைப்படம்!
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்பட நடிகைக்கு திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து மழை! வெளியான புகைப்படம்!

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த கதாநாயகி லிஜோமோல் ஜோஸ்க்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் முடிந்துள்ள நிலையில், அவர் தனது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

திருமண புகைப்படம்:

தமிழகத்தில் குடும்ப பாங்கான படங்கள் என்றாலே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் குடும்ப பாசம், பைக் ரேஸ் மற்றும் காதல் என்று அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்தது. இதனால் படம் நல்ல ஹிட். படத்தில் இரண்டு ஜோடிகள். ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது அக்கா கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் இருவரையும் சுற்றி நடக்கும் கதை. லிஜோமோல் ஜோஸ் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா தான் புதிய வில்லியா? உறுதிப்படுத்தும் காட்சிகள்!

இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் ன் கதாபாத்திரம் மிகவும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ரகம். லிஜோமோல் ஜோஸ் முதலில் மலையாள சினிமாவில் மகேஷிண்டே பிரதிகாரம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படம் தான் முதல் படம். அதன்பிறகு, ரஞ்சித் இயக்கிய தீதும் நன்றும் என்ற படத்திலும் நடித்துள்ளார். அடுத்ததாக சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள ஜெய் பீம் படத்திலும் லிஜோமோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இரட்டை குழந்தை பற்றி சௌந்தர்யாவிடம் கேட்கும் பாரதி – கண்ணம்மாவை விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட செல்லும் வெண்பா!

இந்தப் படம் நவம்பர் 2 தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், லிஜோமோல் மற்றும் அருண் ஆண்டனி என்பவருக்கும் கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் திருமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!