
“பாக்கியலட்சுமி” சீரியலில் இருந்து விலகும் நடிகை திவ்யா கணேஷ் – நேகா வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சிறந்த சீரியல் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் வெளியிட்ட இன்ஸ்டா பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் அவர் சீரியலை விட்டு விலக போகிறாரா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி நடிகை:
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தனித்துவம் வாய்ந்த சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல டாப் சீரியல்கள் இருக்கின்றது. அதில் சிறந்த சீரியல் என விருதை பாக்கியலட்சுமி சீரியல் பெற்றது. பொதுவாக குடும்பக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைத்த பாக்கியா, கோவப்பட்ட கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!
அதிலும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்கள் என்றால் அதற்கு பெண் ரசிகைகள் அதிகம் இருப்பார்கள். தமிழக மக்கள் அனைவரும் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் அளவிற்கு தங்கள் வீட்டு பெண்ணாக பாக்கியாவை நினைக்கின்றனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களுடன் நெருக்கமாக இருக்கின்றனர். அந்த வகையில் பாக்கியாவின் மருமகளாக செழியனின் மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இவர் இதற்கு முன்னதாக பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி ஜெனி கதாபாத்திரம் தான் அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் புதிதாக தொடங்கி இருக்கும் செல்லம்மா சீரியலில் நெகட்டிவ் ரோல் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா மிஸ் யூ என பதிவிட்டு திவ்யாவின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதனால் திவ்யா சீரியலை விட்டு விலக இருக்கிறாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனால் அது உண்மை இல்லை அவர் அந்த சீரியல் ஷூட்டிங்கிற்கு செல்ல இருப்பதால் அவ்வாறு பதிவிட்டுள்ளதாக நேஹா விளக்கம் அளித்து இருக்கிறார்.