அர்ஷ் பிறந்த பிறகு உடல் எடையை கூட்டிய சீரியல் நடிகை ஆலியா – வைரலாகும் வீடியோ!
ஆலியாவிற்கு தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்ளேயே ஆலியா மிகவும் உடல் எடை கூடிவிட்டார். இதனால் நெட்டிசன்கள் பலரும் ஆலியாவை கலாய்த்த காரணத்தினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எடையை கூட்டிய ஆலியா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா. இந்த தொடரினை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது கூட ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து வந்தார்.
காணாமல் போன பார்வதி, தேடி அலையும் குடும்பத்தினர் – “ராஜா ராணி 2” சீரியல் இன்றைய எபிசோட்!
தற்போது ஆலியாவிற்கு அர்ஷ் என்கிற ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை பெற்றுக்கொண்ட அனைத்து தாய்மார்களும் பல பிரச்சனைகளை சமாளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆலியா இரண்டு குழந்தைகளையும் ஆப்ரேசன் மூலமாக தான் பெற்றெடுத்துள்ளார். இதனால் பிரசவத்திற்கு பிறகு மிகவும் உடல் எடை கூடிவிட்டார். ஐலா பாப்பா பிறந்த போதும் இதே போல தான் மிகவும் எடை கூடிவிட்டார். பின்பு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில நாட்களிலேயே உடல் எடையை கணிசமாக குறைந்து மீண்டும் நடிக்க வந்தார்.
Exams Daily Mobile App Download
அதே போல தற்போதும் உடல் எடையை ஆலியா குறைத்து வருகிறார். பிரசவத்திற்கு பிறகு பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். குழந்தையின் முகம், சிரிப்பை பார்த்த அடுத்த நொடியிலேயே அனைத்து கஷ்டங்களும் பறந்தோடி விடும். குழந்தை பிறந்த பிறகு சருமத்தினையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை கவனித்து கொள்வது போல மீதி நேரத்தில் நமது உடலையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.