“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் நபர் – மனம் திறந்த அருண்!

0
"பாரதி கண்ணம்மா" வெண்பா பரீனாவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் நபர் - மனம் திறந்த அருண்!
“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் நபர் – மனம் திறந்த அருண்!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்து வரும் நடிகை பரீனாவின் வெற்றிக்கு பின் இருப்பது இவர் தான் என, பாரதியாக நடிக்கும் அருண் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. இவரை பரீனா என சொல்வதை விட வெண்பா என சொன்னால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவு இந்த சீரியலில் அவர் கதாபாத்திரத்தில் மூழ்கி உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது மாசமாக இருக்கிறார். அவரது கணவர் சர்ப்ரைஸாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். அதில் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

ராஜு மீது சில விமர்சனங்களை முன் வைக்கும் ஸ்ருதி, பாவனி – ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

சிறு வயதில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பலர் திட்டுவதை தனது வெற்றியாக நினைக்கும் பரீனா தற்போது கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதை எப்படி எதிர் கொள்கிறார் என பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத் அந்த விழாவில் தெரிவித்துள்ளார். ஸ்டார்ங்காக இருக்கும் பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒருவர் இருப்பார் அல்லவா? அவர் இப்படி தான் இருப்பார் என வெண்பாவின் கணவரை காட்டுகிறார். ஏன் என்றால் அவர் வெறும் நடிகை அல்ல அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

புதிய கண்ணம்மாவாக களமிறங்கும் ‘யாரடி நீ மோகினி’ வெண்ணிலா – ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் ஷாக்!

அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் இப்படி ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கும் போது அவரை சுற்றி எல்லாம் பாசிட்டிவாக இருக்கணும், ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி இருக்காது. அப்போது ஒருவர் வந்து தட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி வெண்பாவின் கணவர் இருப்பார். இருவரும் நல்ல ஜோடி என பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடிக்கும் அருண் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!