‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா – ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ்!

1
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா – ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது என்ட்ரி ஆக வந்துள்ள தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா அடுத்து வரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ளதாக இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

பெயர் சூட்டும் விழா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனது குடும்ப பாங்கான கதையின் மூலமாக மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது. ஒன்றாக பிறந்த 4 அண்ணன், தம்பிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி காட்சிகள் உள்ளது. அதில், மூத்த அண்ணியாக வரும் தனம் கதாபாத்திரம் மற்ற 3 தம்பிகளையும் தனது குழந்தையாக நினைத்து வளர்க்கிறார். இதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தியாகம் செய்கிறார்.

“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் நபர் – மனம் திறந்த அருண்!

இதை தெரியாமல் தனத்திற்கு குழந்தை இல்லை என்று பலரும் அவரை காயப்படுத்தி வருவர். ஆனால் தனம் அது எதையும் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பார். ஒரு கட்டத்தில் தனமும், மூர்த்தியும் சேர்ந்து தான் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் முடிவை எடுத்திருப்பதை அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மற்ற தம்பிகள் தனத்தின் தியாகத்தை உணர்ந்து மிகவும் வருத்தம் அடையும் படி காட்சிகள் வந்தது. இந்நிலையில், திடீரென்று தனம் கர்ப்பமாக இருப்பதாக கதையில் மாற்றம் செய்யப்பட்டது.

ராஜு மீது சில விமர்சனங்களை முன் வைக்கும் ஸ்ருதி, பாவனி – ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். கதைப்படி கடந்த வாரத்தில் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஒட்டியே காட்சிகள் தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனத்தின் குழந்தை அலங்கரித்த தொட்டிலில் இருப்பது போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடு முழுவதும் விழாக்கோலமாக உள்ளது. இதனால் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. This serial is very super I see all the serialls in Vijay TV Bharathi Kannamma,bakiyalakshmi,Pandian stores,Naam iruvar namaku iruvar,tamilum Saraswathiyum

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!