புதிய கண்ணம்மாவாக களமிறங்கும் ‘யாரடி நீ மோகினி’ வெண்ணிலா – ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் ஷாக்!

0
புதிய கண்ணம்மாவாக களமிறங்கும் 'யாரடி நீ மோகினி' வெண்ணிலா - 'பாரதி கண்ணம்மா' ரசிகர்கள் ஷாக்!
புதிய கண்ணம்மாவாக களமிறங்கும் 'யாரடி நீ மோகினி' வெண்ணிலா - 'பாரதி கண்ணம்மா' ரசிகர்கள் ஷாக்!
புதிய கண்ணம்மாவாக களமிறங்கும் ‘யாரடி நீ மோகினி’ வெண்ணிலா – ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் முன்னிலையில் இருக்கும் பிரபல சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பாரதி மற்றும் கண்ணம்மாவின் இல்லற வாழ்க்கையை மையமாக கொண்டே கதை சென்றுக் கொண்டிருக்கிறது. 8 வருடங்களுக்கு பின் கதை தொடர்ந்தாலும் சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் என்பவரும், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி என்பவரும் நடித்து வருகின்றனர்.

4 வருடங்களாக தமிழ் சின்னத்திரை சீரியல்களில் முன்னணி சீரியலாக இந்த சீரியல் இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி திடீரென விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். பழைய கண்ணம்மாவை தொடர்ந்து சீரியலை முடிக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை அறிமுகம் செய்து சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு PF வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும் – அரசாணை வெளியீடு!

கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த கதாபாத்திரத்தில் யாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் களமிறங்க கூடிய நட்சத்திரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் மகளாக நடித்த லிஷா தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

TNPSC 2021 குரூப் 1, 2 & 4 VAO தேர்வுகள் – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

எனவே இருவருக்கும் அம்மா, பொண்ணு பாசம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ரோஷினி சீரியலில் இருந்து விலகினாலும் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திரா இதில் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றத்திற்கு பின் சீரியலில் என்னவெல்லாம் திருப்பங்கள் இருக்கும், வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா குழந்தை பெற்று சென்று விட்டால் என்ன கதை மாற்றம் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!