அட்லீ – ஷாருக்கான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – குஷியில் ரசிகர்கள்!

0
அட்லீ - ஷாருக்கான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள்!
அட்லீ - ஷாருக்கான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள்!
அட்லீ – ஷாருக்கான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – குஷியில் ரசிகர்கள்!

தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கானை வைத்து அட்லி ஒரு திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படத்திற்கு ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படம் எந்த தேதியில் வெளியாகிறது என்பது குறித்தான அனைத்து தகவல்களும் வெளியாகி உள்ளது.

ஜவான்:

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் பணியாற்றி ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லி. ராஜா ராணி திரைப்படத்தினை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து பாலிவுட்டிலும் அட்லி கூட்டணி சேர்ந்துள்ளார். அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது பணியாற்றி விட வேண்டுமென அட்லி மிகவும் ஆசையில் இருந்து வந்தார்.

Exams Daily Mobile App Download

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திய நிலையில் பாதியிலேயே திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டீசர் குறித்த சென்சார் தகவலில் படத்தின் பெயர் ஜவான் என அறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு லயன் என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜவான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட திரைப்பட டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜவான் என்ற பெயர்தான் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.

பாரதி காதலுக்கு வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரும் எனவும், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் திரைப்படம் வெளியாக உள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!