ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு – முழு விவரம் இதோ!

0
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு - முழு விவரம் இதோ!
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு - முழு விவரம் இதோ!
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு – முழு விவரம் இதோ!

தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மோசடிகளை தவிர்க்கலாம் என்கிறது. இந்நிலையில் ஆன்லைனில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் இணைப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் (EC) ஆகஸ்ட் 1 ஆம் தேதி சில மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பிரச்சாரத்தை தொடங்கியது. அதாவது வாக்காளர் அடையாளத்தை சரிபார்க்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிக்கவும், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடையாளம் காணவும், வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் விருதுகளுக்கான புதிய நடைமுறை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் பல மாநிலங்களில் இது தொடர்பான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு ஆதாரை இணைப்பதற்கு மக்களுக்கு உதவுவார்கள். இது தவிர, மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம். தேசிய வாக்காளர் சேவைகள் போர்டல்- nvsp.in-ல் இது பற்றிய முழுமையான தகவல்கள் உள்ளன. மேலும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நபரும் தங்களது ஆதார் எண்ணுடன் படிவம் 6B-ஐ தேர்தல் பதிவு அதிகாரியிடம் சமர்ப்பிக்க தகுதியுடையவர்கள்.

ஆன்லைனில் ஆதாரை இணைப்பதற்கான எளிய வழிமுறைகள்:
  • தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான eci.gov.in ஐப் பார்வையிடவும்
  • உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழையவும்
  • உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும் -பெயர், பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயர்
  • தேடல் ஐகானைக் கிளிக் செய்யவும்
  • உங்கள் விவரங்கள் அரசாங்கத்தின் தரவுத்தளத்துடன் பொருந்தி திரையில் காட்டப்படும்.
  • திரையின் இடது பக்கத்தில், “ஃபீட் ஆதார் எண்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஒரு பாப்-அப் பக்கம் தோன்றும்
  • ஆதார் அட்டையில் உள்ள பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும்/அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை இப்போது உள்ளிட வேண்டும்.
  • உங்கள் தகவலைச் சரிபார்த்து, பின்னர் “சமர்ப்பி” என்பதை அழுத்தவும்
  • விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்டதும், ஒரு செய்தி காண்பிக்கப்படும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here