தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் விருதுகளுக்கான புதிய நடைமுறை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

0
தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் விருதுகளுக்கான புதிய நடைமுறை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் விருதுகளுக்கான புதிய நடைமுறை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் விருதுகளுக்கான புதிய நடைமுறை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக புதிய நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆசிரியராக பணியாற்றியவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆண்டு குறைந்தபட்சமாக 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டது. இதையடுத்து, குறைந்தபட்சமாக 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இவ்விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு புதிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவ்விருது பெற குறைந்தபட்சமாக 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி அவர் மீது எவ்வித புகாரும் இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே விருது பெற்றவராக இருப்பின் மீண்டும் அவர்களுக்கு விருது வழங்கப்பட கூடாது. மேலும் இவ்விருது பெற தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் CEO தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதன்படி இக்குழு ஆலோசனை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டு தகுதியான ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!