விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பு - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பு - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு சினிமா நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் அபிமான விஜய் நட்சத்திரங்கள் பங்குபெறும் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சி நாளை (மே 13) மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது.

விஜய் நட்சத்திர கொண்டாட்டம்:

தென் தமிழகத்தில் சிறந்த சேனல்கள் வரிசையில் விஜய் டிவியை அடித்துக் கொள்ள முடியாது. அந்த வகையில் சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. மேலும் விஜய் டிவியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி அதன் மூலமாக சினிமாவிற்கு சென்று டாப் ஹீரோ வரிசையில் இடம் பிடித்தவர்கள் கூட இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக நடிகர் சிவகார்த்திகேயனை சொல்லலாம். அவரை தொடர்ந்து சாமானிய மக்களில் ஒருவராக இருந்த பலர் பிரபலமாக மாறி இருக்கின்றனர்

Exams Daily Mobile App Download

மேலும் விஜய் டிவி நட்சத்திரங்கள் சினிமா நடிகர் நடிகைகளை போல லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் திறமைசாலிகளை மேடை ஏற்றுவதில் விஜய் டிவியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. மேலும் மற்ற சேனல்களில் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் விஜய் டிவியில் அழகை விட திறமைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும், விஜய் டிவி நட்சத்திரம் என்று வெளியே பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறது.

கணேஷால் அவமானபடுத்தப்படும் கண்ணம்மா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இந்நிலையில் விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் பார்க்க மக்கள் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் வரும் இடங்களில் ஏகப்பட்ட மக்கள் கூட்டத்தை பார்க்க முடியும், அந்த வகையில் தற்போது விஜய் டிவி நட்சத்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு வர இருக்கின்றனர். நாளை மே 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு VHNSN கல்லூரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. விஜய் டிவி பிரபலங்களை பார்க்க ரசிகர்கள் நேரில் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!