இந்திய உணவகங்களுக்கான முக்கிய அறிவிப்பு – இனி ‘இந்த’ வசூல் கூடாது!
இந்தியாவில் செயல்படும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை பின்பற்றாத உணவகங்கள் மீது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதாக புகார் தெரிவிக்கும் வண்ணம் உதவி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சேவைக் கட்டணம்:
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பொருட்கள் விற்பனைக்கும் ஒரே விதமான வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜிஎஸ்டி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி மூலம் 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.1,44,616 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத வரி வசூலைவிட 56 சதவீதம் அதிகம் ஆகும். நாட்டில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததிலிருந்து 5ஆவது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி என்ற அளவைக் கடந்து மாதாந்திர ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி கட்டணம் மூலம் விலைவாசி உயர்ந்து வருவதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
இந்த நேரத்தில் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சேவைக் கட்டணம் என்ற பெயரில் அதிகத்தொகை வசூலிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே மக்கள் கொரோனா வைரஸ் தொற்று அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் சேவை கட்டணம் செலுத்துவது பெரும் சுமையாக உள்ளது. இது போன்ற நிகழ்வை தடுக்க மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த சேவை கட்டணம் என்பது அவர்களாக விருப்பப்பட்டு கொடுப்பது மேலும் இது அவர்களின் தனி விருபமும் ஆகும்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனால் இதனை செலுத்த கூறி உணவகங்கள் மற்றும் விடுதிகள் வாடிக்கையாளர்களை நிர்பந்திக்க கூடாது. மேலும் உணவுக்கட்டணத்துடன் சேர்த்து மொத்த தொகைக்கு ஜி.எஸ்.டி.,விதிப்பதன் மூலம் சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது. இந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக உணவகங்கள் மற்றும் விடுதிகள் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு கூறலாம். மேலும் தன்னிச்சையாக சேவைக் கட்டணத்தை சேர்க்கும் உணவகங்கள் அல்லது விடுதிகள் மீது வாடிக்கையாளர்கள் 1915 என்ற எண் மூலம் புகாரளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.