சமண, புத்த சமயங்கள்

0

சமண, புத்த சமயங்கள்

           வரலாற்றில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு மிகச்சிறந்த நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. புத்தர்,  மகாவீரர், ஹெராக்ளிடஸ், சொராஸ்டர், கன்பூசியஸ், போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்ந்து தங்களது கருத்துக்களை பரப்பியது இந்த நூற்றாண்டில்தான். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் குடியரசு நிறுவனங்கள் வலிமையாகத் திகழ்ந்தன. இதனால், சடங்குகள் ஆதிக்கம் செலுத்திய வைதீக சமயத்திற்கு எதிரான சமயங்கள் எழுச்சிபெற வாய்ப்புகள் தோன்றின. அவற்றில் சமணமும், பௌத்தமும் வெற்றி பெற்றதோடு, இந்திய சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களையும் ஏற்படுத்தின.

சமண,  புத்த சமயங்கள் எழுச்சிபெறக் காரணங்கள்:

  • கி.மு.ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய சமயம் சார்ந்த அமைதியின்மையே சமண, புத்த சமயங்களின் எழுச்சிக்கு முதன்மையான காரணமாகும்.
  • பிந்தைய வேத காலத்தில் புகுத்தப்பட்ட சிக்கலான சடங்குமுறைகளும் வேள்விகளும் சாதாரண மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மேலும், வேள்விக்கான செலவுகளும் ஏராளமாக இருந்தன.
  • மூடநம்பிக்கைகளும், மந்திரங்களும் மக்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கின. வேள்வி முறைகளுக்கு மாற்றாக எழுந்த உபநிடதங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் உயர்ந்த தத்துவங்களை எடுத்துக் கூறின. ஆனால் அவற்றை சாதாரண மக்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியவில்லை.
  • எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு எளிய, புரிந்து கொள்ளக்கூடிய மோட்சத்திற்கான சிறந்த வழி தேவைப்பட்டது. அத்தகைய வழியும் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய மொழியில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். இந்த தேவைகளை புத்தர், மகாவீரர் ஆகியோருடைய போதனைகள் நிறைவு செய்வதாக அமைந்தன.
  • மேற்கண்ட சமய காரணங்கள்தவி, சமூக, பொருளாதார சூழ்நிலைகளும் இவ்விரண்டு சமயங்களின் எழுச்சிக்கு வித்திட்டன.
  • இந்தியாவிலிருந்த கடுமையான ஜாதிமுறை சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்iபை ஏற்படுத்தியிருந்தது. கீழ்சாதியினருக்கு மறுக்கப்பட்ட பல சலுகைகளை உயர் சாதியினர் அனுபவித்து வந்தனர்.
  • புரோகித வர்த்தகத்தின் ஆதிக்கத்தை ஷத்திரியர்கள் வெறுத்தனர். புத்தர், மகாவீரர் இருவருமே ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • வாணிக வளர்ச்சியின் பயனாக வைசியர்களின் பொருளாதார நிலை உயர்ந்திருந்தது. ஆனால், வர்ணாஸ்ரம முறையின்கீழ் வைசியருக்கு உயரிய இடம் அளிக்கப்படவில்லை.
  • எனவே, அவர்கள் புத்த, சமண சமயங்களை ஆதரிக்கத்தொடங்கினர். வாணிக வகுப்பினரான இவர்கள் இவ்விரண்டு புதிய சமயங்களுக்கும் மகத்தான ஆதரவு அளிpத்து போற்றினர்
  • வர்த்தமான மகாவீரரின் வாழ்க்கை (கி.மு.539 – கி.மு.467)
  • வர்த்தமான மகாவீரர் சமண பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர். வைசாலிக்கருகிலுள்ள குண்டக் கிராமத்தில், ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த சித்தார்த்தருக்கும், திரிசலைக்கும் வர்த்தமானர் மகனாகப் பிறந்தார்.
  • யசோதை என்ற பெண்மணியை மணந்த அவர் ஒரு பெண் மகளுக்கும் தந்தையானார். தளது முப்பாதாவது வயதில் துறவு பூண்ட வர்த்தமானர் பன்னிரண்டு ஆண்டுகள் சுற்றியலைந்தார்.
  • 13 ஆம் ஆண்டில் தவத்தின் பலனாக ‘கேவல ஞானம்’ என்ற உயரிய ஆன்மீக அறிவைப் பெற்றார். அதன்பின் அவர் மகாவீரர் என்றும், ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார். அவரது சீடர்கள் சமணர்கள் எனப்பட்டனர். அவரது கருத்துக்கள் சமணம் என்று வழங்கப்;பட்டது.
  • முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தமது கருத்துக்களை மகாவீரர் பரப்பிவந்தார். தமது 72 ஆவது வயதில் ராஜகிருகத்திற்கு அருகிலுள்ள பாவா என்ற இடத்தில் அவர் மறைந்தார்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

மகாவீரரின் போதனைகள்:

  • சமண சமயத்தின் மூன்று முக்கிய கோட்பாடுகள் மூன்று இரத்தினங்கள் எனப்படுகின்றன. அவை:
  1. நல்ல நம்பிக்கை
  2. நல்ல அறிவு
  3. நல்ல நடத்தை
  • நல்ல நம்பிக்கை என்பது மகாவீரரின் கருத்துக்களிலும் பேரறிவிலும் நம்பிக்கை வைத்தலாகும். நல்ல அறிவு என்பது கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, உலகத்தை படைத்தவர் எவருமில்iலை என்பதையும் அனைத்து பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்பதையும் உணர்ந்து கொள்வதாகும். நல்ல நடத்தை என்பது ஐந்து முக்கிய விரதங்களை கடைப்பிடிப்பதைக் குறிக்கும். அவை:
  1. உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமை
  2. பொய் உரைக்காமை
  3. களவு செய்யாமை
  4. சொத்துக்களை கொள்வதை விடுத்தல்
  5. ஒழுக்கமற்ற வாழ்வை நடத்தாமலிருத்தல்
  • சமண சமய சீடர்களும், மக்களும் அகிம்சைக் கோட்பாட்டை தவறாமல் கடைப்பிடித்தல் வேண்டும்.
  • உயிருள்ள, உயிரில்லா அனைத்து பொருட்களும் ஆன்மாவை பெற்றுள்ளன என்று மகாவீரர் கூறினார். அவற்றுக்கு வாழ்க்கை உண்டு எனவும், காயப்படுத்தும்போது வலியை உணர்கின்றன என்றும் கருதினர்.
  • வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்த அவர், வேத சமயத்தின் சடங்குகளை எதிர்த்தார். புனிதமான, ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதின் சிறப்பை அவர் வலியுறுத்தினார்.
  • நிலம், மண்புழுக்கள், விலங்குகள் போன்றவற்றுக்கு தீங்கு விளைவதால்; வேளாண்மை செய்வதுகூட பாவம் என அவர் கருதினார். அதேபோல், பட்டினி கிடப்பது, ஆடையைத் துறப்பது, தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வது போன்ற நடைமுறைகளினால் துறவற வாழ்க்கையை அதன் உச்சகட்டத்திற்கே மகாவீரர் இட்டுச் சென்றார்.

சமண சமயம் பரவுதல்:

  • தமது கருத்துக்களை பரப்புவதற்கு மகாவீரர் சங்கத்தை அமைத்தார். அதில் ஆண், பெண் இருபாலரையும் சேருவதற்கு அனுமதித்தார். சங்கத்தில் துறவிகள் மற்றும் சாதாரண சீடர்களும் இருந்தனர்.
  • சங்க உறுப்பினர்களின் அயராத உழைப்பினால் சமண சமயம் வேகமாகப் பரவியது. குறிப்பாக மேற்கு இந்தியாவிலும், கர்நாடகத்திலும் அது பரவியது.
  • சந்திரகுப்த மௌரியர், கலிங்க நாட்டு காரவேலர், தென்னிந்திய அரச குலங்களான கங்கர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் ஆகியோர் சமண சமயத்தை போற்றி ஆதரித்தனர்.
  • கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் கங்கைச் சமவெளியில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. பத்ரபாகு மற்றும் சந்திரகுப்த மௌரியர் தலைமையில் பல சமணத் துறவிகள் கர்நாடகாவிலுள்ள சிரவணபெல்கோலாவை வந்தடைந்தனர்.
  • வட இந்தியாவிலேயே தங்கிவிட்ட சமணத் துறவிகளுக்கு ஸ்தூலபாகு என்ற துறவி தலைமையேற்றார். துறவிகளுக்கான விதிமுறைகளை அவர் மாற்றியமைத்தார். இதனால், சமண சமயம் இரண்டாக பிரிந்தது.
  • ஒரு பிரிவினர் ஸ்வேதாம்பரர்கள் (வெள்ளையுடை அணிந்தவர்கள்) என்றும் மற்றொரு பிரிவினர் திகம்பரர்கள் (திசையையே ஆடையாகக் கொண்டவர்கள்) என்றும் அழைக்கப்பட்டனர்.
  • கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்ää திகம்பரர்களின் தலைவரான ஸ்தூலபாகு பாடலிபுத்திரத்தில் முதலாவது சமண மாநாட்டைக் கூட்டினார்.
  • கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாலாபியில் இரண்டாவது சமண மாநாடு நடைபெற்றது. பன்னிரண்டு அங்கங்கள் எனப்படும் சமண இலக்கியத்தின் இறுதி வடிவம் இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

புத்த சமயம்:

  • கௌதம புத்தரின் வாழ்க்கை (கி.மு.567 – கி.மு.427)
  • புத்த சமயத்தை நிறுவிய கௌதமர் அல்லது சித்தார்த்தர் கபிலவஸ்துவுக்கு அருகிலுள்ள லும்பினி தோட்டத்தில் கி.மு.567 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • சாக்கிய குலத்தைச் சேர்நத சுத்தோதனர் அவரது தந்தை. மாயாதேவி அவரது தாய். சேயாக இருக்கும் போதே தாயை இழந்த சித்தார்த்தர் சிற்றன்னை பிரஜாபதி கௌதமி என்பவரால் வளர்க்கப்பட்டார்.
  • தனது பதினாறாவது வயதில் யசோதரையை மணந்து கொண்ட அவர் ராகுலன் என்ற மகனுக்கு தந்தையானார். வயோதிகர், நோயாளி, பிணம், துறவி ஆகியவற்றை கண்ணுற்ற அவர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.
  • தமது இருபத்தி ஒன்பதாம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் ‘உண்மை’யைத் தேடி ஏழாண்டுகள் அலைந்தார். பல அறிஞர்களை சந்தித்து விளக்கம் கேட்டும் அவருக்கு பேரறிவு கிட்டவில்லை.
  • இறுதியாக புத்தகயாவிலுள்ள போதிமரத்துக்கடியில் தவம் செய்தபோது சித்தார்த்தருக்கு பேரறிவு (நிர்வாணம்) கிட்டியது. அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஐந்து. அதன்பிறகு, அவர் புத்தர் அல்லது ‘ஒளிபெற்றவர்’ என்று அழைக்கப்பட்டார்.
  • பெனாரசுக்கு அருகிலுள்ள சாரநாத் என்ற இடத்தில் புத்தர் தனது முதலாவது உரைய நிகழ்த்தினார். அடுத்த நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் இடைவிடாத பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார்.
  • குசிநகரம் என்றவிடத்தில் தனது எண்பதாவது வயதில் அவர் உயிர் நீத்தார்.
  • சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர், கசபர், உபாலி ஆகியோர் புத்தரின் முக்கிய சீடாகளாவர். கோசல நாட்டு பிரசேனஜித், மகத நாட்டு பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு ஆகிய அரசர்கள் அவரது கோட்பாடுகளை ஏற்று சீடர்களாயினர்.
  • புத்தர் தமது வாழ்நாளிலேயே வடஇந்தியா முழுவதிலும் பயணம் செய்து தமது கருத்துக்களை பரப்பினர். பெனாரஸ், ராஜகிருஹம், ஸ்ராவஸ்தி, வைசாலி, நாளந்தா, பாடலிகிராமம் ஆகியன அவர் வருகைபுரிந்த முக்கிய இடங்களாகும்.
  • கடவுள், ஆன்மா, கர்மா, மறுபிறவி போன்ற புலன்களுக்கு எட்டாத வெற்று தத்துவ வாதங்களில் ஈடுபடுவதை புத்தர் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தே அவர் அதிக கவனம் செலுத்தினார்

புத்தரின் போதனைகள்:

  • புத்தர் போதித்த நான்கு சீரிய உண்மைகளாவன:
  1. உலகம் துன்பங்கள் நிறைந்தது
  2. துன்பங்களுக்கு காரணம் ஆசை
  3. ஆசைகளைத் துறந்தால் துன்பங்களைத் துடைக்கலாம்.
  4. இதற்கு எண்வகை வழிகளைப் பின்பற்றுதல் வேண்டும்
  • எண்வகை வழிகளாவன: நன்னம்பிக்கை, நன்முயற்சி, நற்பேச்சு, நன்னடத்தை, நல்வாழ்வு, நன்முயற்சி, நற்சிந்தனை,  நல்தியானம்.
  • புத்தர் கடவுளை ஏற்கவுமில்லை: கடவுள் இருப்பதை மறுக்கவும் இல்லை. கர்மவினைக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனது செய்கைகளே நிர்ணயிக்கின்றன.
  • ஆன்மா என்ற எதுவும் இல்லை. இருப்பினும் அவர் அஹிம்சையை வலியுறுத்தினார். மனித குலத்திடமும் பிற உயிரினங்களிடமும் அன்பு பாராட்டியதோடு மிகவும் நேசிக்கவும் செய்தார்.
  • எத்தகைய சினத்திற்கு அவர் தூண்டப்பட்டாலும் அமைதியாகவே பதிலளிப்பார். மாறாக, தனது அன்பாலும், கருணையாலும் அவர்களை தமது பக்கம் ஈர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவராக புத்தர் விளங்கினார்.
  • ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அவரது சமயம். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அவர் தூய்மையை வலியுறுத்தினார்.
  • பகுத்தறிவாளாரான புத்தர், கண்மூடித்தனமாக வாதிடாமல், எதனையும் அறிவின் அடிப்படையிலேயே அணுகினார். ஜாதிமுறையை அவர் நேரடியாக சாடாவிட்டாலும், சமூக வேற்றுமைகளுக்கு எதிராக வாதிட்டார்.
  • அனைத்து சமூகத்தவரையும் தமது சமயத்தில் சேர அனுமதித்தார். எனவே, புத்த சமய எழுச்சியை ஒரு சமயப்புரட்சி என்பதைவிட சமூகப்புரட்சி என்று கூறலாம். நடைமுறைக்கு சாத்தியமான ஒழுக்க நெறிகளை அது போதித்தது. சமூக சமத்துவ கோட்பாட்டிற்கும் அது வித்திட்டது.

புத்த சமயம் பரவுதல்:

  • புத்தருக்கு இரண்டு வகை சீடர்கள் உண்டு – பிக்குகள் என்ற புத்த சமயத் துறவிகள்ää உபாசிகர்கள் என்ற சாதாரண புத்த சமயத்தைத் தழுவிய மக்கள்.
  • புத்தரது போதனைகளை பரப்புவதற்கு, புத்த சமயத் துறவிகளைக் கொண்ட சங்கம் அமைக்கப்பட்டது. ஆண், பெண், சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.
  • பெண்;துறவிகளுக்கு அவர்களது இருப்பிடம் மற்றும் பிரயாணம் குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர் ஆகியோர் புகழ்மிக்க புத்த சமயத் துறவிகளாவர்.
  • ஜனநாயக முறைப்படி சங்கம் நிர்வகிக்கப்பட்டது. உறுப்பினர்களிடையே ஒழுக்கத்தை செயல்படுத்தும் அதிகாரம் சங்கத்திடம் இருந்;தது.
  • சங்கம் மேற்கொண்ட அயராத முயற்சிகளின் பலனாக புத்தரது வாழ்நாளிலேயே புத்த சமய கருத்துக்கள் வட இந்;தியாவில் வேகமாகப் பரவியது.
  • மகதம், கோசலம், கோசாம்பி மற்றும் பல வடஇந்திய குடியரசுகள் புத்தசமயத்தை ஏற்றுக்கொண்டன. புத்தர் மறைந்து ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு மௌரியப் பேரரசர் அசோகர் புத்தசமயத்தை தழுவினார்.
  • அசோகர் அனுப்பிய தூதுக் குழுக்கள் மூலமாக, மேற்கு ஆசியா, இலங்கை ஆகிய பகுதிகளுக்கும் புத்த சமயம் பரவியது. சிறிய சமயப் பிரிவாகத் தோன்றிய புத்த சமயம் இவ்வாறு உலக சமயமாக மாறியது.

புத்தசமய மாநாடுகள்:

  • புத்தர் மறைந்தவுடனேயே, மகாகசபர் தலைமையில் ராஜகிருஹத்தில் முதல் புத்த சமய மாநாடு கூட்டப்ட்டது. புத்தரது போதனைகளின் தூய்மையை பாதுகாப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • சுமார் கி.மு.383 ஆம் ஆண்டு இரண்டாவது புத்தசமய மாநாடு வைசாலியல் நடைபெற்றது. அசோகரது ஆதரவில் பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்தசமய மாநாடு கூடியது.
  • மொக்காலிபுத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார். இம்மாநாட்டில் திரிபீடகங்கள் இறுதிவடிவம் பெற்றது. வசுமித்திரர் தலைமையில் காஷ்மீரில் நான்காவது புத்தசமய மாநாட்டை கனிஷ்கர் கூட்டினார்.
  • அசுவகோஷர் இம்மாநாட்டில் பங்கேற்றார். இம்மாநாட்டில்தான் மகாயான புத்த சமயம் என்ற புதிய சமயப் பிரிவு உருவாயிற்று. புத்தரால் போதிக்கப்பட்டதும் அசோகரால் பரப்பப்பட்டதுமான புத்த சமயம் ஹனயானம் என்று அழைக்கப்பட்டது.
  • புத்தர் மறைந்து ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் புத்தசமய நூல்கள் திரட்டப்பட்டு தொடக்கப்பட்டன. அவை திரிபீடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன: சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்மபீடகம். அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.

இந்தியாவில் புத்தசமயம் மறைய காரணங்கள்:

  • பிராமண சமயம் புத்துயிர் பெற்றதாலும், பாகவத சமயத்தின் எழுச்சியாலும் புத்தசமயத்தின் புகழ் மங்கத் தொடங்கியது.
  • மக்களின் மொழியான பாலிமொழி புத்தசமயத்தின் மொழியாக இருந்த நிலை கி.பி. முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு மாறியது.
  • கற்றோர் மொழியான வடமொழியை புத்தசமயம் பின்பற்றத் தொடங்கியது. மகாயான புத்தசமயம் தோன்றிய பிறகு, சிலை வழிபாடும் பூசைகளும் மலிந்தன.
  • இதனால் ஒழுக்கநெறிகள் குறையத் தொடங்கின. மேலும் கி.பி 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற ஹ_ணர்களின் படையெடுப்பாலும், 12 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட துருக்கிய படையெடுப்புகளின் போதும் புத்தசமய மடயலயங்கள் அழிக்கப்பட்டன. இத்தகைய காரணங்களால் இந்தியாவில் புத்த சமயம் மறைந்தது.

இந்தியப் பண்பாட்டிற்கு புத்த சமயத்தின் பங்களிப்பு:

  • இந்திய பண்பாட்டு வளர்ச்சிக்கு புத்தசமயம் அரும் பணியாற்றியுள்ளது.
  1. அகிம்சை கோட்பாடு அதன் முக்கிய பங்களிப்பாகும். பிற்காலத்தில் நமது நாட்டின் முக்கிய விழுமியமாக அஹிம்சைக் கொள்கை விளங்கியது.
  2. இந்தியக் கலை, கட்டிடக் கலைக்கு புத்த சமயத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சாஞ்சி, பார்ஹீத், கயா ஆகிய இடங்களிலுள்ள ஸ்தூபிகள் இந்தியக் கட்டிடக் கலையின் சிறப்புக்கு சான்றுகளாகும். இந்தியாவின் பல பகுதிகளில் சைத்தியங்களும், புத்த விஹாரங்களும் அமைக்கப்பட்டன.
  3. தட்சசீலம், நாளந்தா,விக்ரமசீலா ஆகிய இடங்களிலிருந்தே புத்தசமய பல்கலைக் கழகங்களும், பிற கல்வி நிறுவனங்களும் சிறந்த கல்வித் தொண்டாற்றியுள்ளன.
  4. பாலி மொழி, மற்றும் பிற உள்நாட்டு மொழிகள் வளர்வதற்கு புத்தசமய பிரச்சாரம் காரணமாயிற்று.
  5. ஆசியாவின் பிறபகுதிகளுக்கு இந்தியப் பண்பாட்டை புத்தசமயம் எடுத்துச் சென்றது.
PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!