மீஞ்சூரில் ₹4,800 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் – முதல்வர் விஜய்

0

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்!

தமிழ்நாட்டின் நகர்ப்புற குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மீஞ்சூர் குடிநீர் திட்டம்

வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் நிலையம் அமைக்கப்படும்.

ஆவடியில் 24 மணி நேர குடிநீர்

ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும், பழமையான கூட்டுக்குடிநீர் திட்டங்களை சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மீஞ்சூர் கடல்நீர் குடிநீராக்கும் திட்டமும், ஆவடி 24 மணி நேர குடிநீர் திட்டமும் வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!