Airbus-ன் முக்கிய ஒப்பந்தத்தை பெற்ற Mahindra Aerostructures!
இந்தியாவின் விண்வெளி உற்பத்தித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, Airbus நிறுவனம் Mahindra Aerostructures நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
என்ன தயாரிக்கிறது Mahindra?
இந்த ஒப்பந்தத்தின் கீழ், Airbus A320neo மற்றும் A321XLR விமானங்களின் பின்புற உடற்பகுதி மற்றும் வால் பகுதிகளுக்கான fuselage skins தயாரிக்கப்பட உள்ளன.
இந்த உதிரிபாகங்கள் பெங்களூருவில் உள்ள Mahindra Aerostructures ஆலையில் தயாரிக்கப்பட்டு, ஜெர்மனியின் Augsburg நகரில் உள்ள Airbus உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும்.
இந்தியாவுக்கு முக்கியத்துவம்
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் விமான உதிரிபாக உற்பத்தி திறன் மேலும் வலுப்பெறும். மேலும், உலகளாவிய aerospace supply chain-ல் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக Mahindra நிறுவனம் advanced chemical milling, surface treatment மற்றும் stretch-forming போன்ற தொழில்நுட்ப வசதிகளில் முதலீடு செய்ய உள்ளது. உற்பத்தி வழங்கல்கள் 2028-ல் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



























