2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடும் சட்டசபை
தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் நடைபெறும்.
4 துறைகள் மீது மானியக் கோரிக்கை
கேள்வி நேரத்தைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகிய 4 துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.
அமைச்சர்களின் பதிலுரை
விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கேள்விகளை முன்வைக்க உள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளனர்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் 4 முக்கிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுவதால், புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



























