NCC சான்றிதழ் இருந்தால் அதிக மதிப்பெண்..!
தேசிய மாணவர் படை எனப்படும் NCC யில் இருந்தவர்களுக்கு CAPF போலீ்ஸ் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். National Cadet Corps NCC எனப்படும் தேசிய மாணவர் படை பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் NCC யில் சேர்ந்து பங்காற்றினால், பின்வரும் காலத்தில் போலீஸ், ராணுவத்தில் எளிதாக சேர வாய்ப்பு வழங்கப்படும். மேலும், தனியார் துறைகளிலும் NCC மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
*Read More Latest Government Job 2020*
இந்த நிலையில், NCCயில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படும் வகையில்,CAPF பாராமிலிட்டரியில் சப்இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வில் இனி NCC மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CAPF தேர்வில் NCC ‘C’ Certificate வைத்திருப்பவர்களுக்கு மொத்த மதிப்பெண்ணில் 5% கூடுதலாக வழங்கப்படும். NCC ‘B’ Certificate வைத்திருப்பவர்களுக்கு 3% மதிப்பெண்ணும், மற்றும் NCC ‘A’ Certificate வைத்திருப்பவர்களுக்கு 2% மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*Read More Bank Government Job 2020*
இந்திய ராணுவத்தின் அடிப்படை பயிற்சியான, துப்பாக்கி கையாளுதல் உள்ளிட்ட அனைத்து பயிற்சியும் NCC மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதில் ‘A’ சர்டிபிக்கேட் என்பது முதல் நிலை எனவும், ‘B’ சர்டிபிக்கெட் என்பது இரண்டாம் நிலை ஆகும். NCC ‘C’ சர்டிபிக்கெட் பெற வேண்டுமானால், ‘B’ தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் NCC ‘C’ என்பது மற்ற நிலைகளைக் காட்டிலும் சற்று கடினமான பயிற்சிகளை பெற வேண்டும்.
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
All news are super