Anna University Academic Reforms 2026:
பொறியியல் படிப்புகளுக்கான புதிய
‘Absolute Grading’ முறையும், அதிரடி மாற்றங்களும்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளையும் (Affiliated Engineering Colleges) கட்டுப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்களின் கல்வி மதிப்பீட்டுத் தரம் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சில மிக முக்கியமான புதிய அகாடெமிக் விதிமுறைகளை (New Academic Regulations) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் சேரவிருக்கும் மாணவர்கள் மற்றும் தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
1. ரிலேட்டிவ் கிரேடிங் முறை ரத்து;
புதிய ‘Absolute Grading System’ அமல்!
அண்ணா பல்கலைக்கழக அகாடெமிக் கவுன்சில் எடுத்துள்ள மிக முக்கிய முடிவின்படி, பொறியியல் கல்லூரிகளில் இனி கூட்டுப் பெர்ஃபாமன்ஸ் (Collective performance) அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் ரிலேட்டிவ் கிரேடிங் முறை முழுமையாகக் கைவிடப்படுகிறது.
-
- புதிய விதிமுறை:
வரும் கல்வி ஆண்டு (2026-27) முதல் மாணவர்கள் எடுக்கும் தனிப்பட்ட மதிப்பெண்களின் (Individual scores) அடிப்படையிலேயே கிரேடிங் வழங்கப்படும். - 8-புள்ளி கிரேடிங்:
மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட திறமைக்கு ஏற்ப ‘Outstanding’ முதல் ‘Re-appearance’ (தேர்வு மறுபடி எழுதுதல்) வரையிலான புதிய 8-புள்ளி கிரேடிங் சிஸ்டம் (8-point grading system) மூலம் மதிப்பிடப்படுவார்கள்.
- புதிய விதிமுறை:
2. படிப்பை முடிக்க அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அவகாசம்!
பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கான கால வரம்பை அண்ணா பல்கலைக்கழகம் முறைப்படுத்தியுள்ளது.
-
- காலவரம்பு:
வழக்கமான 4 ஆண்டு பி.இ/பி.டெக் படிப்புகளில் சேரும் மாணவர்கள் தங்களின் அனைத்துப் பாடங்களையும் எழுதிப் பட்டத்தைப் பெற அதிகபட்சமாக 7 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள் + 3 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்) வரை அனுமதிக்கப்படுவார்கள். - லேட்டரல் என்ட்ரி:
டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் (Lateral Entry) மாணவர்களுக்குப் படிப்பை முடிக்க அதிகபட்சமாக 6 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
- காலவரம்பு:
3.தொழில்முனைவோர் மற்றும் இண்டஸ்ட்ரி 4.0 திறன்கள்
தியரி படிப்புகளோடு நிறுத்தாமல் மாணவர்களைத் தற்போதைய கார்ப்பரேட் வேலைவாய்ப்புகளுக்குத் தயார் செய்யப் பாடத்திட்டங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன .
-
- புதிய இண்டர்ன்ஷிப் மற்றும் எலக்டிவ்ஸ்:
மெக்கானிக்கல் மற்றும் ஐடி போன்ற முதன்மைத் துறைகளில் டிஜிட்டல் மேனுஃபேக்ச்சரிங், இண்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வெஹிக்கிள் டிசைன் (EV Design) போன்ற ‘இண்டஸ்ட்ரி 4.0’ சார்ந்த எலக்டிவ் பாடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன . மேலும், இறுதி செமஸ்டரில் 8 கிரெடிட்டுகள் கொண்ட கேப்ஸ்டோன் ப்ராஜெக்ட் (Capstone Project) மற்றும் நேரடி இண்டஸ்ட்ரி பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
- புதிய இண்டர்ன்ஷிப் மற்றும் எலக்டிவ்ஸ்:
























