நீட் 2026 மறுதேர்வு: ஆன்லைன் தேர்வுக்கு ‘நோ’ சொன்ன உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன?
இந்திய மருத்துவக் கல்வியின் நுழைவாயிலாகக் கருதப்படும் நீட் தேர்வு (NEET UG 2026), இந்த ஆண்டு சந்தித்த சர்ச்சைகள் போல இதற்கு முன்பு எப்போதும் சந்தித்ததில்லை. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் காரணமாக நாடு முழுவதும் மே மாதம் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21, 2026 அன்று மறுதேர்வு (Re-exam) நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது இந்தச் சூழலில், தேர்வு முறையில் மாற்றம் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய முக்கிய தீர்ப்பு மாணவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
தொடர் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வினாத்தாள் கசிவைத் தடுக்கவும் ஜூன் 21 அன்று நடக்கவிருக்கும் மறுதேர்வை கணினி வழித் தேர்வாக (Computer Based Test – CBT) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிமன்றம், தற்போதைய குறுகிய கால அவகாசத்தில் ஒட்டுமொத்த தேர்வு முறையையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றினால் அது தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களையும் குழப்பங்களையும் விளைவிக்கும் எனக் கூறி இந்த மனுவை அதிரடியாக நிராகரித்துள்ளது இதன் காரணமாக, வரவிருக்கும் மறுதேர்வு எவ்வித மாற்றமும் இன்றி எப்போதும் போல பேப்பர்-பேனா (OMR Sheet) முறையிலேயே நேரடியாக நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
டெல்லியில் வெடித்த மாணவர் போராட்டம்
தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (ஜூன் 6) பிரம்மாண்ட அமைதிப் போராட்டம் நடைபெற்றது . ‘காக்ரோச் ஜந்தா பார்ட்டி’ (CJP) என்ற அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், கல்வித் துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன


























