TNPSC CTS Recruitment 2026: நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!

0

நினைவூட்டல் (Reminder): TNPSC-ன் 461 அரசு காலிப்பணியிடங்கள்!
ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்!
தவறவிடாதீர்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அண்மையில் வெளியிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (Combined Technical Services Exam 2026 – Non-Interview) குறித்த மிக முக்கியமான நினைவூட்டல் செய்தி இது. இந்தத் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை (மே 27, 2026) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. 

பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முக்கியத் தேதிகளின் அதிகாரப்பூர்வ காலவரிசை இதோ.

அதிகாரப்பூர்வ காலவரிசை மற்றும் முக்கியத் தேதிகள் (Official Timeline)

அறிவிப்பு வெளியான நாள்:
மே 20, 2026

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்:
மே 27, 2026 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 25, 2026
(இரவு 11:59 மணி வரை)

விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window):
ஜூன் 29 முதல் ஜூலை 01, 2026 வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள்:
ஆகஸ்ட் 03, 2026 முதல் ஆகஸ்ட் 09, 2026 வரை 

மிக முக்கியமான அதிகாரப்பூர்வ இணைப்புகள்
(Important Direct Links) 

 ஆன்லைனில் விண்ணப்பிக்க:
டிஎன்பிஎஸ்சி ஆன்லைன் போர்ட்டல் (apply.tnpscexams.in)

முழுமையான தேர்வுத் திட்டம்:
TNPSC அதிகாரப்பூர்வ ஆனுவல் பிளானர் 2026 

தேர்வுக்கான பாடத்திட்டம்:
டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ சிலபஸ் பக்கம்
(Syllabus Link) 

வேலைவாய்ப்பு மற்றும் பதவிகளின் சுருக்கம்;

மொத்த காலிப்பணியிடங்கள்:
461 இடங்கள் (45 வகையான பல்வேறு தொழில்நுட்பப் பதவிகள்).

முக்கியப் பிரிவுகள்:
உதவி பொறியாளர் (AE), மருந்து ஆய்வாளர், புள்ளியியல் அதிகாரி, புவியியலாளர்.

தேர்வு முறை: நேர்காணல் கிடையாது (non-interview). கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மட்டுமே.

தேர்வர்களுக்கான முக்கியமான எச்செரிக்கை!

  1. சர்வர் நெரிசலைத் தவிர்க்கவும்:
    விண்ணப்பக் காலம் ஒரு மாதம் இருந்தாலும், கடைசி நாட்களில் ஏற்படும் ஆன்லைன் சர்வர் நெரிசலைத் தவிர்க்க இப்போதே சான்றிதழ்களைத் தயார் செய்து ஜூன் முதல் வாரத்திற்குள் விண்ணப்பித்து விடுங்கள்.

  2. நிரந்தரப் பதிவு (OTR):
    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் உங்களிடம் 5 வருட செல்லுபடியாகும் ‘One Time Registration’ கணக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். புதிய தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தளம் (tnpscexams.in) மூலம் புதிய OTR கணக்கை உருவாக்கலாம்.
     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!