TNPSC தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா..? அப்போ கண்டிப்பா இதை படியுங்க..!!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து அரசு பணிகளில் நியமித்து வருகிறது. இத்தேர்வானது Prelims , Mains மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து, இத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாதாள்களை படிப்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் சிலவற்றின் தொகுப்பை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
1.பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
(A) நம்மாழ்வார்
(B) பெரியாழ்வார்
(C) ஆண்டாள்
(D) குலசேகராழ்வார்
(E) விடை தெரியவில்லை
விடை : (D)
2.இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் ________
(A) உவமை அணி
B) சிலேடை அணி
(C) உருவக அணி
(D) தற்குறிப்பேற்ற அணி
(E) விடை தெரியவில்லை
விடை : (B)
3.மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
(A) சிவகாமியின் சரிதம்
(B) சிவகாமியின் செல்வன்
(C) சிவகாமியின் வரலாறு
(D) சிவகாமியின் சபதம்
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
சொந்த தொழில் தொடங்க ரெடியா இருங்க.. ரூ.1.5 கோடி வரை கடனுதவி வழங்கும் அரசு..!!
4.இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சுந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு _____
(A) 1891
(B) 1881
(C) 1871
(D) 1901
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
5.’உலகம் நிலையற்றது’ எனப் பாடிய சித்தர்__________
(A) இடைக்காட்டுச் சித்தர்
(B) குதம்பைச் சித்தர்
(C) பட்டினத்தார்
(D) சிவவாக்கியர்
(E) விடை தெரியவில்லை
விடை : (B)


























