சென்னை துறைமுகத்தில் Manager வேலை – சம்பளம்: ரூ.1,00,000/- || முழு விவரங்களுடன்!
Manager, Deputy Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.
Chennai Port காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager, Deputy Manager பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree in Environmental Science / Environmental Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Port வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CMC வேலூர் கல்லூரியில் Medical Officer வேலை – மாத சம்பளம்: ரூ.78,000/- || முழு விவரங்களுடன்!.
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Chennai Port தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























