தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கோடை விடுமுறை எப்போ முடியும்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மேலும், வெப்ப அலை காரணமாக, பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது தமிழகத்தில் வரும் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் 2 ம் தேதி அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறு தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


























