எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா.. புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முடிவு..!!
கடந்த மாதம் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கை நடத்தியது. இதை தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா ராணுவம் பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
CSIR ஆணையத்தில் Stenographer வேலைவாய்ப்பு 2025 – 20+ காலிப்பணியிடங்கள் || ரூ.81,100/- சம்பளம்!
இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே “நாட்டின் எல்லைகளை கண்காணிக்க “RISAT-1 B” என்ற செயற்கைக்கோளை இந்தியா உருவாக்கியுள்ளது. மேலும், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் இந்த செயற்கைக்கோளை வரும் மே 18 ஆம் தேதி “PSLV-C 61″ ராக்கெட் விண்வெளிக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஆனது அனைத்து விதமான வானிலை காலங்களிலும் தெளிவான படங்களை எடுத்து அனுப்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்”.



























