
மாணவர்கள் கவனத்திற்கு.. முன்கூட்டியே வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. மேலும், தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வு எழுதினர். இதை தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், மே 9 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது.
இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??
இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டதால், “ஒரு நாள் முன்பே அதாவது மே 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the ExamsDaily Whatsapp Group
























