
நகை பிரியர்கள் கவனத்திற்கு..!! ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
பொதுவாக, மக்கள் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் நல்ல நாட்களில் தங்கம் வாங்க நினைப்பது வழக்கம். ஏனெனில், அந்த நாட்களில் நகை வாங்கினால் பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், முருகப்பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திர தினமான இன்று நகை வாங்க பலரும் முன்னரே திட்டமிட்டு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலையானது இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு நாட்களாகவே உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ 1,485 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 69,960க்கு விற்பனையாகிறது, அதே போல், ஒரு கிராம் தங்கம் ரூ. 185 உயர்ந்து ரூ. 8,745 க்கு விற்பனையாகிறது.

























