மக்களுக்கு ஷாக்…!! கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் அதிரடி உயர்வு…!! மத்திய அரசு அறிவிப்பு

0
?????????? ????...!! ????, ???????? ??????? ????? ?????? ??????...!! ?????? ???? ?????????
மக்களுக்கு ஷாக்...!! கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் அதிரடி உயர்வு...!! மத்திய அரசு அறிவிப்பு

மக்களுக்கு ஷாக்…!! கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் அதிரடி உயர்வு…!! மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது சாமானிய மக்களிடையே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவிட்டனர். இந்த விலை உயர்வு பிரச்சினையை சமாளிக்க பெட்ரோல் மற்றும் டீசலை GST இன் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது. இந்நிலையில் “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியுள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்துவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்ஷித் சிங் தெரிவித்துள்ளார். இனி மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853 க்கும், உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550 ஆக விற்பனை செய்யப்படும் அறிவித்துள்ளார். இந்த மாற்றம் ஆனது நாளை (08-04-2025) முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறை அறிவித்துள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!