TNHRCE ஆணையத்தில் ரூ.41,800/- சம்பளத்தில் வேலை – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

0
TNHRCE ?????????? ??.41,800/- ??????????? ???? - ???? ??????????? || ???? ????????????!
TNHRCE ஆணையத்தில் ரூ.41,800/- சம்பளத்தில் வேலை - உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

TNHRCE ஆணையத்தில் ரூ.41,800/- சம்பளத்தில் வேலை – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant, Night Watchman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNHRCE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள Office Assistant, Night Watchman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parisarakar/Suyambagi – 1 பணியிடம்

Office Assistant – 1 பணியிடம்

Night Watchman – 1 பணியிடம்

Thiruvalagu – 4 பணியிடங்கள்

கல்வி தகுதி:

8ம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parisarakar/Suyambagi – விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,200/- முதல் ரூ.41,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Office Assistant – விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,600/- முதல் ரூ.39,900/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Night Watchman – விண்ணப்பதாரர்களுக்கு ரூ.11,600/- முதல் ரூ.36,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Thiruvalagu – விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.31,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!