ICC T20 World Cup Winners List with Captain Tamil – Free PDF Download
What is the ICC T20 World Cup?
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். இதுவரை 9 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இப்போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.
மேலும், முதன்முதலாக 2007 இல் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து, முன்னதாக ஐசிசி உலககோப்பை 20-20 என்று அழைக்கப்பட்ட இந்த போட்டி 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு “ஆண்கள் டி20 உலகக் கோப்பை” என மறுபெயரிடப்பட்டது.
இந்த மறுபெயரிடும் முடிவானது சர்வதேச கிரிக்கெட்டை குறுகிய வடிவத்துடன் உலகமயமாக்குவதற்காவும் அதன் அந்தஸ்தையும் மேம்படுத்துவதற்காகவும் ICC யால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 2007 முதல் 2024 வரையிலான டி20 உலகக் கோப்பையை வென்றவர்களின் பட்டியல் பற்றி இப்பதிவில் காண்போம். மேலும், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில், இது போன்ற விளையாட்டுத் துறை சார்ந்த பொது அறிவு கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படுவதால், இவை உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
ICC T20 World Cup Winners List from 2007 to 2024
| ஆண்டு | வெற்றியாளர்கள் |
|---|---|
| 2007 | இந்தியா |
| 2009 | பாகிஸ்தான் |
| 2010 | இங்கிலாந்து |
| 2012 | மேற்கிந்திய தீவுகள் |
| 2014 | இலங்கை |
| 2016 | மேற்கிந்திய தீவுகள் |
| 2021 | ஆஸ்திரேலியா |
| 2022 | இங்கிலாந்து |
| 2024 | இந்தியா |
ICC T20 World Cup Winners & Runners List
| ஆண்டு | கேப்டன் | வெற்றியாளர்கள் | இரண்டாம் இடம் | பிளேயர் அப் தி சிரிஸ் | அதிக ரன்கள் எடுத்தவர் | அதிக விக்கெட் எடுத்தவர் | போட்டி நடந்த
இடம் |
| 2007 | தோனி | இந்தியா | பாகிஸ்தான் | ஷாஹித் அப்ரிடி | மேத்யூ ஹேடன் | உமர் குல் | தென்னாப்பிரிக்கா |
| 2009 | யூனிஸ் கான் | பாகிஸ்தான் | இலங்கை | திலகரத்ன தில்ஷான் | திலகரத்ன தில்ஷான் | உமர் குல் | இங்கிலாந்து |
| 2010 | பால் கோலிங்வுட் | இங்கிலாந்து | ஆஸ்திரேலியா | கெவின் பீட்டர்சன் | மஹேல ஜெயவர்த்தனே | டிர்க் நன்ஸ் | வெஸ்ட் இண்டீஸ் |
| 2012 | டேரன் சமி | மேற்கிந்திய தீவுகள் | இலங்கை | ஷேன் வாட்சன் | ஷேன் வாட்சன் | அஜந்தா மெண்டிஸ் | இலங்கை |
| 2014 | லசித்
மலிங்கா |
இலங்கை | இந்தியா | விராட் கோலி | விராட் கோலி | அஹ்சன் மாலிக் மற்றும் இம்ரான் தாஹிர் | பங்களாதேஷ் |
| 2016 | டேரன் சமி | மேற்கிந்திய தீவுகள் | இங்கிலாந்து | விராட் கோலி | தமீம் இக்பால் | முகமது நபி | இந்தியா |
| 2021 | ஆரோன் ஃபின்ச் | ஆஸ்திரேலியா | நியூசிலாந்து | — | பாபர் அசாம் | வனிந்து ஹசரங்க | ஓமன் & ஐக்கிய அரபு நாடுகள் |
| 2022 | ஜோஸ் பட்லர் | இங்கிலாந்து | பாகிஸ்தான் | சாம் கர்ரன் | விராட் கோலி | வனிந்து ஹசரங்க | ஆஸ்திரேலியா |
| 2024 | ரோஹித் சர்மா | இந்தியா | தென்னாப்பிரிக்கா | ஜஸ்பிரித் பும்ரா | ரஹ்மானுல்லா குர்பாஸ் | அர்ஷ்தீப் சிங் | பார்படாஸ் |
- 1. How many T20s has India won?
India have won the 2007, 2024 T20 competition.
- Who won the T20 ICC World Cup 2024?
India won the T20 ICC World Cup 2024.
- Who is the man of the 2024 T20 World Cup tournament?
Bumrah won the Player of the Tournament award.
- Where is the T20 World Cup in 2026?
ICC announced that India and Sri Lanka will co-host the Men’s T20 World Cup in 2026.
5. Who are the players in India’s squad for T20 World Cup 2026?
Suryakumar Yadav (captain), Axar Patel, Abhishek Sharma, Arshdeep Singh, Harshit Rana, Dhruv Jurel (wicket-keeper), Mohammed Shami, Nitish Kumar Reddy, Hardik Pandya, Ravi Bishnoi, Sanju Samson (wicket-keeper), Rinku Singh, Tilak Varma, Varun Chakravarthy, Washington Sundar.


























