
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் அதானி குழும டெண்டர் ரத்து..!! ” தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்”..!!
தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தொடர்பாக, சமீபத்தில் சர்வதேச டெண்டர் கோரி அதானி குழுமத்துடன் தமிழக மின்சார வாரியம் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. அந்த வகையில், தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்காக அதானி குழுமத்துடன் சர்வதேச டெண்டர் கோரப்பட்ட நிலையில், தற்போது அதை ரத்து செய்வதாக தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது. இது தொடர்பாக TANGEDCO கூறியதாவது, “தமிழ்நாடு மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதானி குழுமம் அறிவித்த தொகை அதிகமாக இருப்பதால், இந்த சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த டெண்டரை ஏற்றுக்கொண்டால், ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


























