
தங்க ஆபரணங்களை வாங்குவதில் இந்தியா முதலிடம்..!! ” இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்”..இதோ எவ்வளவு டன்-னு நீங்களே பாருங்க”..!!
உலகநாடுகளில் தங்க ஆபரணங்களை அதிக அளவில் விரும்பும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்தது, 2வது இடத்தில் சீன நாடு உள்ளது. மூன்றாவது நாடாக ஜப்பான் உள்ளது. ஆனால், இவ்விரு நாடுகளை காட்டிலும் இந்தியாவில் உள்ள பெண்கள் எப்போதும் தங்க ஆபரணங்களை அணிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்திய பெண்மணிகளிடம் டன் கணக்கில் தங்கம் சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஆண்டுதோறும் டன் கணக்கில் தங்கத்தை இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், உலகத்தில் உள்ள மொத்த தங்கத்தில் 11% (24000 டன்) தங்க நகைகள் இந்திய பெண்கள் வைத்திருப்பதாக உலக கோல்டு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பெண்களிடம் மட்டுமே 6,720 டன் தங்கம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மற்ற நாடுகளான அமெரிக்காவில் 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷ்யா 1,900 டன் தங்கம் வாங்கியுள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.


























