
மதுரை மற்றும் திருச்சியில் களமிறங்கும் மினி டைடல் பார்க்..!! ” கூடிய விரைவில் அடிக்கல் நாட்டு விழா”..!!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொழில் சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள பிரபல நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, தற்போது மதுரை மற்றும் திருச்சியில் “மினி டைடல்” பூங்கா அமைப்பதற்கு கூடிய விரைவில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுவார் என தமிழக தொழில்துறை அமைச்சர் T.R.P. ராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தப்போது தெரிவித்துள்ளார்.


























