தவெகவில் இணையப்போகும் ஆதவ் அர்ஜுனா..!! இதுவும் விஜயின் அரசியல் ஆட்டமா..? முழு விவரம் உள்ளே..
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி விசிகவில் இருந்து அக்கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று அக்கட்சியில் இருந்து முழுவதும் தன்னை விடுவித்துக்கொள்வதாக கூறி ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் ஆதவ் அர்ஜுனாவிடம் தவெகவில் இணைய உள்ளீர்களா…? என எழுப்பிய கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதிலளிக்காமல் ” எதிர்கால திட்டம் குறித்து விரைந்து ஆலோசித்து அறிவிப்பேன்” எனவும், “எங்கு இணைக்கிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே ஆலோசிக்கிறேன்” எனவும் கூறியுள்ளார். இவரது பதில் மூலம் இவர் விரைவில் தவெகவில் இணையலாம் என தெரிகிறது.



























