தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மக்களால் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசு தான். அதன்படி பொதுமக்கள் தற்போது தங்களுக்கான பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரேஷன் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்..!! வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்..!!
அந்த வகையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர் தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம் காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம்.அதன்படி தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு கடைகள் அமைக்க தமிழகம் முழுவதும் 9,177 கடைகளுக்கு விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்தன. அதில், இதுவரை 6,585 பட்டாசு கடைகளுக்கு தடையில்லா சான்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,911 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.



























