இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் மதுரை விமான நிலையம்..!! முழு விவரம் உள்ளே..!!
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளதாகவும் மற்றும் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றம் செய்ய போவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய விமான ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது. அந்த வகையில், இன்று முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர், குடியுரிமை அதிகாரிகள் ஆகியோர் 24 மணி நேரமும் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது . மேலும், கோலாலம்பூர், மஸ்கட், ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!! ” மத்திய அரசு அறிவிப்பு”..!!



























