TNPSC குரூப் 4 புவியியல் 2024 – முக்கியமான கேள்விகள் என்னென்ன தெரியுமா??
TNPSC தேர்வில் புவியியல் படங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் மிகவும் நுட்பமானதாக இருக்கும். ஏனென்றால், தமிழகம் மற்றும் இந்தியா என இரு பிரிவுகளில் புவியியல் கூறுகளை படிக்க வேண்டும். மேலும், கேள்விகளில் பழமை முதல் தற்போது வரை உள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் என அனைத்தும் இடம் பெறும். இதனால், முந்தைய ஆண்டு வினாக்களை சரியாக படித்து அதன் அடிப்படையில் தேர்வுக்கு தயாராவது தான் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படியான சில கேள்விகளை கீழே விடைகளுடன் காணலாம்.
1) 20 ஆம் நூற்றாண்டின் வெப்பமான ஆண்டு எது?
(A) 1988
(B) 1998
(C) 1978
(D) 1968
விடை – B
2) எதிரி இராணுவங்களின் நடமாட்டம் மற்றும் அணுசக்தி நிலையங்களின் அமைவிடங்களைக் கண்டறிந்து தகவல் கொடுக்கும் செயற்கைக் கோள்,
(A) வள செயற்கைக் கோள்
(B) உளவு செயற்கைக் கோள்
(C) சூரியனைச் சார்ந்த செயற்கைக் கோள்
(D) புவிநிலைச் செயற்கைக் கோள்
விடை – B
3) கோமதி எந்த ஆற்றின் துணையாறு?
(A) யமுனை
(B) கங்கை
(C) பிரம்மபுத்திரா
(D) சட்லஜ்
விடை – B
4) கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல?
(A) 800
(C) 2000
(B) 1200
(D) 2100
விடை – D
5) இந்தியாவில் காட்டு ஆராய்ச்சி நிறுவனம் (FRI) எங்கு அமைந்துள்ளது?
(A) டெல்லி
(B) டேராடூன்
(C) கொல்கத்தா
(D) ஊட்டி
விடை – B