தமிழக 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – (TN 11th Result) வெளியீடு!
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயின்று பொதுத்தேர்வு எழுதிய 11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று காலை வெளியாகிவிட்டது. நடப்பு ஆண்டு, தமிழகம் முழுவதும் பல லட்சம் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் 14 முதல் ஏப்ரல் 05ம் தேதி வரை எழுதினார்கள்.
பணிப்பெண் வேலைக்கு 2 கோடி சம்பளம் – இந்த தகுதிகள் இருந்தால் மட்டும் போதும்!
இந்நிலையில், மே 19ம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் அல்லது www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.